பிகில்" படத்திற்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு : மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு

கும்பகோணத்தில் பிகில் திரைப்படத்திற்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிகில் படத்திற்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு : மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு
x
கும்பகோணத்தில் பிகில் திரைப்படத்திற்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அந்த கட்சியினர் ஓட்டியுள்ள போஸ்டரில், ரசிகர்களை மதம் மாற்றும் முயற்சியில் பிகில் திரைப்படம் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. காவி வேட்டி, கழுத்தில் சிலுவையுடன் விஜய் தோன்றுவதால், ரசிகர்களின் மனநிலை பாதிக்கும் என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது. இதனை கண்டித்து கும்பகோணத்தில் உள்ள இந்து மக்கள் கட்சியினர் ருத்ராட்சம் வழங்கும் விழாவை ஏற்பாடு செய்துள்ளதாக நகர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியதால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்