அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தீபாவளி போனஸ் வழங்க தாமதமாவதாக கூறி, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் முன்பணம் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை என கூறி ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வடபழனி பணிமனையில் ஆர்ப்பாட்டம் நடத்திய  போக்குவரத்து கழக ஊழியர்கள், முன்கூட்டியே தீபாவளி போனஸ் மற்றும் முன்பணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

கடலூரில் தீபாவளி போனஸ் மற்றும் முன் பணத்தை உடனடியாக வழங்கக் கோரி, கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோவையில் உள்ள பணிமனைகள் முன்பு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். விழாக்கால சிறப்பு பேருந்துகளை இயக்க உத்தரவிடும் அரசு, போனஸ் தொகையை உடனடியாக கொடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் சாட்டினர். சென்னை திருவொற்றியூரில் பேருந்துகளை நிறுத்தி மாநகர போக்குவரத்து ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போனஸ் தொகை வழங்காத தமிழக அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்