தீபாவளி 2019 : மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி துறை அறிவுரை

பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பள்ளி கல்வித்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
x
பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பட்டாசுகள் வெடிக்கும் போது மாணவர்கள் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். எளிதில் தீ பிடிக்கும் டெரிலின், டெரிகாட்டான் உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தண்ணீரை அருகில் வைத்து கொண்டு பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்றும், விலங்குகளை துன்புறுத்தும் வகையில் அதன் அருகில் பட்டாசுகள் வெடிக்க கூடாது என்றும் அந்த சுற்ற‌றிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதேபோல இரவு 10மணி முதல் காலை 6மணி வரை பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்று கூறியுள்ள பள்ளிக்கல்வித்துறை, அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஆசிரியர்களுக்கும் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தீபாவளிக்கு முன்பே மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், தீ தடுப்பு முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட சில உத்தரவுகள் இதில் அடக்கம்.

Next Story

மேலும் செய்திகள்