கணினி மயமாக்கப்பட்ட தமிழக காவல்துறை...

தமிழக காவல் துறையின் நிர்வாக ரீதியான பணிகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
கணினி மயமாக்கப்பட்ட தமிழக காவல்துறை...
x
அரசு அலுவலகங்கள் மற்றும் காவல்துறை அலுவலகங்களில் கட்டு கட்டாக தேங்கி கிடக்கும் கோப்புகளை பார்த்திருப்போம். குறிப்பாக காவல் நிலையங்களில் எப்.ஐ.ஆர். உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் காகிதங்களாகவே இதுநாள் வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் காவல்துறையில் நவீனத்தை கொண்டு வரும் வகையில் பேப்பர் பயன்பாட்டை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இ -ஆபீஸ் என்ற மென்பொருள் மூலம் காவல் துறையில் நிர்வாக ரீதியான அனைத்து வேலைகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.  

கடந்த ஜூன் மாதம் இதற்கென தனி பிரிவு உருவாக்கப்பட்டது. மதுரை, திருச்சி, திருவள்ளூர், தர்மபுரி,சேலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக  அனைத்து பணிகளும் இ ஆபீஸ் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிர்வாக ரீதியான அனைத்து  பணிகளும் இந்த இ ஆபீஸ் மென்பொருள் மூலம் நொடியில் செய்து முடிக்கப்படும். எளிதில் செயல்படுத்தக் கூடியது என்பதால் இதனை முழு மூச்சாக கொண்டு சேர்க்க திட்டமிட்டு இருக்கிறார்கள். படிப்படியாக இந்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த சுமார் 1500 கணினிகள் வாங்க காவல்துறைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்