தந்தி டிவி செய்தி எதிரொலி: படுக்கை வசதி இல்லாத செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆய்வு

தந்தி டிவி செய்தியின் எதிரொலியாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் பிரசவ பிரிவில் படுக்கை வசதி குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
x
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவ பிரிவில் போதிய படுக்கை வசதி இல்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் பிரசவம் அடைந்த பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் தரையில் படுக்க வைக்கப்பட்டனர். இந்த அவலத்தை தந்தி டி.வி செய்தியாக ஒளிபரப்பு செய்தது. அதன் எதிரொலியாக, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், மருத்துவ கல்வி இயக்குநர் ஹரிபாபு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் செங்கல்பட்டு மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.  

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், பிரசவ வார்டுகளில் 50க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளை உயர்த்தியுள்ளதாகவும், ஆம்புலன்ஸ் எண்ணிக்கை விரைவில் உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்