சாமி சிலைகளை உடைத்த மர்மநபர்கள் : வெளியான சிசிடிவி காட்சிகள்

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உளள்து.
x
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, சாமி சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உளள்து.தெப்பம்பாளையம் என்ற நிகழ்ந்த இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. ஒரே சமூகத்தை சேர்ந்த இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, இந்த சிலைகள் உடைக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே சிலை உடைப்பு சம்பவத்தை கண்டித்து, கொடுமுடி சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிலை உடைப்பு சம்பவத்தை கண்டித்து சிவகிரி, அம்மன் கோவில் கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளில், கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, மாவட்ட எஸ்.பி. சக்திகணேஷ்,  நேரில் விசாரணை மேற்கொண்டார். 
 

Next Story

மேலும் செய்திகள்