முதலமைச்சருக்கு துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் வாழ்த்து
பட்டமளிப்பு விழாவுக்கு முன்பாக, எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பட்டமளிப்பு விழாவுக்கு முன்பாக, எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், அங்கிருந்த ஜெயலலிதா படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, அன்பழகன், செங்கோட்டையன், பாண்டியராஜன், பெஞ்சமின் மற்றும் முகமது ஜான் எம்பி, டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் பட்டம் பெற்றதும் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story

