இறைச்சிக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
புரட்டாசி மாதம் முடிந்துள்ள நிலையில், இறைச்சிக் கடைகளில், பொது மக்கள் கூட்டம் அலை மோதியது.
புரட்டாசி மாதம் முடிந்துள்ள நிலையில், இறைச்சிக் கடைகளில், பொது மக்கள் கூட்டம் அலை மோதியது. வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில், கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சிக் கடைகள், கடந்த ஒரு மாதமாக வெறிச்சோடிக் கிடந்தது. ஆனால், இன்று இந்தக் கடைகளில், இறைச்சிகள் நிரம்பி வழிந்தன. கடந்த ஒரு மாதமாக வியாபாரம் இல்லாமல் இருந்த இறைச்சி கடை வியாபாரிகள், இன்று காலை முதலே பரபரப்பான வியாபாரம் நடப்பதால் மகிழ்ச்சியில் உள்ளனர். மீன், கோழி மற்றும் ஆட்டு இறைச்சி கடைகளில் அசைவ பிரியர்கள் அலை மோதுவதால், இறைச்சி வியாபாரம் களை கட்டியுள்ளது.
Next Story

