சென்னையில் தேசிய கைத்தறிக் கண்காட்சி: 7 மாநில பாரம்பரிய கைத்தறி உடைகள் விற்பனை

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் நடைபெற்று வரும் தேசிய கைத்தறிக் கண்காட்சியில் 7 மாநிலங்களின் பாரம்பரிய உடைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
x
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் நடைபெற்று வரும் தேசிய கைத்தறிக் கண்காட்சியில் 7 மாநிலங்களின் பாரம்பரிய உடைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடம் வாங்கிச்செல்கின்றனர். 

தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில், நடத்தப்பட்டு வரும் தேசிய கைத்தறிக் கண்காட்சியில்  காஞ்சிபுரம், திருபுவனம், ஆரணி, சேலம் பட்டு ரகங்களோடு, கோரா காட்டன், அருப்புக்கோட்டை, சின்னலாப்பட்டு, பரமக்குடி, உறையூர் பருத்திச் சேலைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, குஜராத், உத்திர பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் நெய்த  பாரம்பரிய உடைகளும், காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

3 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான பட்டு புடவைகளும், 500 ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரையிலான காட்டன் புடவைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் நோக்கத்தோடு வைக்கப்பட்டுள்ள கண்காட்சியில், இதுவரை ஒருகோடி ரூபாய் வரையிலான துணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அதிகாரி தமிழரசி. அரசு நடத்தும் இந்த கைத்தறி கண்காட்சியில் ஆடைகளை வாங்கினால், கைத்தறியை  ஊக்குவிப்பதோடு, நெசவாளர்களின் வீடுகளிலும் தீபம் ஒளிரும்.

Next Story

மேலும் செய்திகள்