மக்கும் குப்பைகளை கொண்டு மின்சாரம் தயாரிப்பு - சுவிட்சர்லாந்து நிதியுதவியுடன் கோவையில் தொடக்கம்

கோவை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை கொண்டு மின்சாரம் தயாரித்து அதை சாலையோர மின்விளக்குகளுக்கு பயன்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.
மக்கும் குப்பைகளை கொண்டு மின்சாரம் தயாரிப்பு - சுவிட்சர்லாந்து நிதியுதவியுடன் கோவையில் தொடக்கம்
x
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுவதால்  சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இந்நிலையில்  கோவை சாய்பாபா காலனி பகுதியில் அமைந்துள்ள பாரதி பார்க் பகுதியில் மக்கும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் அமைப்பை மாநகராட்சி அமைத்துள்ளது.  சுவிட்சர்லாந்து நிதியுதவிடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை அந்நாட்டு அமைச்சர் சிமனொட்டா சமருகா துவக்கி வைத்தார்.  45 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் மூலம் 60 முதல் 90 கிலோ சமையல் எரிவாயு, 300 கிலோ இயற்கை உரம் மற்றும் 150 முதல் 170 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படும். இதன் மூலம் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள 250 தெருவோர மின்விளக்குகள் எரிய வைக்கப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்