பெரியாறு அணை : 18ஆம் கால்வாயில் தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம் பெரியாறு அணையில் இருந்து 18ம் கால்வாய், வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பெரியாறு அணை : 18ஆம் கால்வாயில் தண்ணீர் திறப்பு
x
 தேனி மாவட்டம் பெரியாறு அணையில் இருந்து 18ம் கால்வாய், வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், ஷட்டரை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார். இன்று முதல் 30 நாட்களுக்கு வினாடிக்கு 98 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் திறப்பின் மூலம் தேனி மாவட்டத்தின் 4 ஆயிரத்து 614 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதேபோல் பி.டி.ராஜன் கால்வாயிலும் வினாடிக்கு 100 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் 5 ஆயிரத்து 146 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதிபெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்