ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு : அரசு வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று நீதிபதி உத்தரவு

சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வரும் 24 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு : அரசு வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று நீதிபதி உத்தரவு
x
சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வரும் 24 ஆம் தேதிக்கு  சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. ஜாமீன் கோரி  இருவரும் தாக்கல் செய்த மனு, நீதிபதி கார்த்திகேயன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர், பேனர் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் வரும் 23 ஆம் தேதி விசாரணைக்கு வருவதாகவும், அதுவரை  விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்