ராஜீவ்காந்தி கொலை வழக்கு : தண்டனையை நிறுத்தக் கோரி பேரறிவாளன் மனு

ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு : தண்டனையை நிறுத்தக் கோரி பேரறிவாளன் மனு
x
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன், கடந்தாண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு விசாரணை அமைப்பான எம்டிஎம்ஏவுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கடந்த ஓராண்டாக்கு மேலாக இந்த மனு விசாரணைக்கு பட்டியலிப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில் பேரறிவாளன் தொடர்ந்த மனு, வரும் நவம்பர் 5 ஆம் தேதி விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.  இந்த வழக்கு விசாரணை பட்டியலில் நீக்கப்படமால், இடம்பெறச் செய்ய பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.Next Story

மேலும் செய்திகள்