தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை
x
கனமழை - சாலைகளில் தேங்கிய மழைநீர்


காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய பெய்யும் மழை காரணமாக வேலைக்குச் செல்வோர், பள்ளி - கல்லூரி மாணவர்கள் கடும் அவதியடைந்தனர். சாலைகளில் ஆங்காங்கே நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர்.

வெப்பம் தணித்த மழை - மக்கள் மகிழ்ச்சி


பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, சோழவரம், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக பூமியின் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

மழை எதிரொலி - அணைகளில் உயர்ந்த நீர்மட்டம்திருவண்ணாமலையில் பெய்த தொடர் மழையால், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் மற்றும் அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

மீன்பிடிக்க கடலுக்கு செல்லாத மீனவர்கள்கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் சுற்றுவட்டார கடற்கரை பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

வெளுத்து வாங்கிய மழை - விவசாயிகள் மகிழ்ச்சிஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மொடக்குறிச்சி, சின்னியம் பாளையம், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில், வெளுத்து வாங்கிய கனமழையால், விவசாயிகளும் - பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்