நெருங்கி வரும் தீபாவளி பண்டிகை : சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமை பட்டாசுகள்

பட்டாசு விலையும் 15% அதிகரிப்பு - விற்பனையாளர்கள்
x
படபடக்கும் பட்டாசுகளும், கண்கவர் மத்தாப்பு வகைகளும் தான் தீபாவளி பண்டிகைக்கு வண்ணம் சேர்க்கும். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு விற்பனையும் சந்தைகளில் களைகட்ட தொடங்கி இருக்கிறது. 

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பசுமை பட்டாசுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதையடுத்து சேலம் மார்க்கெட்டிற்கு பசுமை பட்டாசுகளின் வரத்து அதிகரித்துள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் விற்பனையும் சரிந்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு பசுமை பட்டாசுகளுக்கு வரவேற்பு அதிகம் உள்ளதால் 40 முதல் 45 சதவீதம் பட்டாசுகள் சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளன. 

அதேநேரம் கடந்த ஆண்டைக்காட்டிலும் தற்போது 15 சதவீதம் பட்டாசு விலை உயர்ந்து இருக்கிறது. பசுமை பட்டாசு என்பதால் சரவெடிகளின் வரத்து குறைவாக இருக்கும் என்கின்றனர் விற்பனையாளர்கள். 

Next Story

மேலும் செய்திகள்