இனிப்பு, கார வகை தயாரிப்பு விழிப்புணர்வு கூட்டம், சுகாதார முறையில் பலகாரங்கள் தயாரிக்க அறிவுறுத்தல்

தீபாவளி பண்டிகையின் போது இனிப்பு - கார வகை தயாரிப்பின் போது அதிக அளவில் செயற்கை நிறமிகள் பயன்படுத்த கூடாது என கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இனிப்பு, கார வகை தயாரிப்பு விழிப்புணர்வு கூட்டம், சுகாதார முறையில் பலகாரங்கள் தயாரிக்க அறிவுறுத்தல்
x
உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில்  நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் இனிப்பு, கார பலகார உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பங்கேற்றனர். அப்போது பலகாரங்கள் தயாரிக்கும் போது அனுமதிக்கபட்ட அளவை மீறி, அதிக அளவில் செயற்கை நிறமிகள் பயன்படுத்த கூடாது என்றும்,  காரவகை பலகாரங்களுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் இருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கையுறைகளை அணிந்து சுகாதாரமான முறையில் பலகாரங்கள் தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்