நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்

நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ள நிலையில் தட்டுப்பாடின்றி பால் விநியோகம் செய்ய மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்
x
நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ள நிலையில் தட்டுப்பாடின்றி பால் விநியோகம் செய்ய மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை  வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நள்ளிரவு முதல் தமிழகத்தில் உள்ள 275 ஆவின் பால் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. இதனால் சென்னைக்கு செல்ல வேண்டிய 13 லட்சம் லிட்டர் பால் நிறுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் போராட்டம் காரணமாக தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்