இருளில் மூழ்கிய மாமல்லபுரம் - ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற சுற்றுலா பயணிகள்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் எரியூட்டப் படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்
x
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் எரியூட்டப் படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பிரதமர் - சீன அதிபர் சந்திப்பை ஒட்டி கடற்கரை கோயில், அர்ஜுணன் தபசு, வெண்ணை உருண்டை கல், ஐந்துரதம் உள்ளிட்ட பகுதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் ஒளி வெள்ளத்தில் மிளிர்ந்து வந்தது. இந்நிலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கடந்த 2 நாட்களாக புராதன சின்னங்கள் இருளில் மூழ்கின. இதனால் நேற்றிரவு மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். புராதன சின்னங்களை காண வசதியாக, மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி தர அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்