பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான வழக்கு : அதிமுக பிரமுகரின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க உத்தரவு

பேனர் விழுந்து இளம்பெண் பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் ஜாமீன் மனுவுக்கு 17 ஆம் தேதிக்குள் பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
சென்னை, பள்ளிக்கரணையில் பேனர் விழுந்த விபத்தில், சுபஸ்ரீ என்கிற இளம் பெண் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் அவரது உறவினர் மேகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு  நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, பேனர் அமைத்ததற்கு கண்டனம் தெரிவித்ததுடன்,  தலைமறைவாக இருந்தது குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து அவரது ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க, காவல்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டதால், விசாரணையை வரும்17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்