பூண்டி ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் திறப்பு

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகளில் குடிநீர் கொள்முதலை சென்னை குடிநீர் வடிகால் வாரியம் நிறுத்தி உள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் திறப்பு
x
சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க,  கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் மாகரல், கீழானூர், பூண்டி, புல்லரம்பாக்கம், காந்திநகர், சிறுவானூர் கண்டிகை, உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து குடிநீர் வாங்கப்பட்டது. இந்த தண்ணீர் பூண்டி நீரேற்று நிலையத்தின் மூலம் பம்ப் செய்து சென்னைக்கு அனுப்பப்பட்டு வந்தது. நாளொன்றுக்கு 65 மில்லியன் லிட்டர் தண்ணீரை சென்னைக்கு அனுப்பி வந்த  நிலையில், கடந்த மாதம் 18-ஆம் தேதி, திருவள்ளூர் மற்றும் பூண்டி பகுதிகளில் பெய்த கன மழையால் பூண்டி ஏரிக்கு ஒரே நாளில் 278 மில்லியன் கன அடி தண்ணீர் வந்து சேர்ந்தது. இதுதவிர ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீரின் வரத்தாலும், பூண்டி ஏரியின் நீர் இருப்பு ஒரு டி.எம்.சி.யாக உயர்ந்தது.  இதனைத் தொடர்ந்து, கடந்த 12-ஆம் தேதி புழல் ஏரிக்கு 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில், சென்னைக்கு பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் கிடைப்பதாலும், புழல் ஏரியில் இருந்து ராட்சத மோட்டார் மூலமும் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 210 விவசாய கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை முதற்கட்டமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நிறுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்