தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு : விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கின் விசாரணை நிலை, அறிக்கையை தாக்கல் செய்ய, சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு : விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு
x
தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கின் விசாரணை நிலை, அறிக்கையை தாக்கல் செய்ய, சிபிஐக்கு  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், கிருஷ்ண ராமசாமி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது சிபிஐ இயக்குநர் தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் கோரினர். தொடர்ந்து கால அவகாசம் கோரி வந்தால், எப்போது தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வீர்கள் என்று நீதிபதிகள்,  கேள்வி எழுப்பினர்.  வழக்கின் விசாரணை  நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, டிசம்பர் 10 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்