"எம்.ஜி.ஆர். போல் அள்ளித் தருகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி" - சாக்ரேடிஸ் அ.தி.மு.க. தொண்டர்

எம்.ஜி.ஆர்ரின் மறு உருவம் தான் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி என்று கூறும் அளவிற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தீவிர ரசிகர் ஒருவர் உள்ளார்.
x
சங்கரன்கோவிலை சேர்ந்த 63 வயது முதியவர் சாக்ரேடிஸ், எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அ.தி.மு.க. வின் தீவிர தொண்டராக இருந்து வருகிறார்.அதிமுக துண்டு, தொப்பி, எம்ஜிஆர் பாடல்கள் மட்டுமே ஒலிக்கும் சிறிய டேப் ரெகார்டர் - இவைதான் இவரது அடையாளம். இவர் போடும் எம்.ஜி. ஆர் பாட்டும் எதார்த்த பேச்சும் அதிமுக-வினரை பெரிதும் ஈர்க்கிறது. இளமைக்காலத்தில் பெல் நிறுவனத்தில் வேலை செய்தவர், கடந்த 10 ஆண்டுகளாக கட்சி பணி மட்டுமே செய்து வருகிறார். அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் அளிக்கும் நிதியுதவியால் தான் தமது வாழ்வை சாக்ரேடிஸ் நடத்தி வருகிறார். "எம்ஜிஆருக்கு பிறகு கொடைவள்ளல் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் என்றும், அவருடைய தீவிர ரசிகன் என்றும் பெருமிதத்துடன் கூறுகிறார் சாக்ரேடிஸ்..

Next Story

மேலும் செய்திகள்