சீன அதிபர் பயன்படுத்தும் காரின் சிறப்புகள்
பதிவு : அக்டோபர் 09, 2019, 06:01 PM
சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் விலை உயர்ந்த, அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கறுப்பு நிறத்தால் ஆன 4 கார்களும் போயிங் 747 விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்துள்ளன
தான் பயணிக்க மட்டும் தனியாக காரைத் தயாரிக்க எப்ஏ.டபிள்யு(FAW) கார் தயாரிப்பு நிறுவனத்திடம் ஜி ஜின்பிங் தெரிவித்து இருந்தார்.

இதற்காக சீனாவில் பழமையான, மிகப்பெரிய உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான எப்ஏடபிள்யு நிறுவனம் (Hongqi) ஹாங்கி எல்-5 ரக காரை சீன அதிபருக்காக உருவாக்கி உள்ளது.

'ஹாங்கி' என்பதற்கு சீன மொழியில் 'சிவப்புக் கொடி' என்று பொருள். 10 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை அடையும் திறன் படைத்த 12 வால்வுகளைக் கொண்ட இன்ஜின் இதில் உள்ளது.

சீனாவில் மிக விலை உயர்ந்த காரான இந்த ஹாங்கி எல் 5 ரக காரின் விலை இந்திய மதிப்பில் 5 கோடியே 60 லட்ச ரூபாய்.. 

உருவத்திலும் பெரிய தோற்றம் கொண்ட இந்த காரானது, 3152 கிலோ எடை கொண்டது.

அதிபருக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட கார் என்பதால் காரில் உள்ள பல விஷயங்களை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.

105 லிட்டர் பெட்ரோல் அல்லது கேஸ் நிரப்பிக்கொள்ளும் வசதி இந்த காரில் உள்ளது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 500 மைல்கள் வரை பயணிக்க முடியும். 

அதிக வேகத்தில் செயல்படும் ஏசி, செயற்கைக்கோள் தொலைபேசி வசதி இருக்கிறது. இதன் மூலம் காரில் செல்லும் போதும் எந்த வித தடையின்றி தெளிவாக பேச முடியும்

நான்கு கதவுகளும் குண்டு துளைக்காத, சிறிய ரக ஏவுகணைகள் மூலம் தாக்கினாலும் கார் எந்தவிதமான சேதமும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

20 லட்சம் கோடி நிதி தொகுப்பு திட்டங்கள் - "அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்" - தொண்டர்களுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தல்

மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி நிதி தொகுப்பு திட்டங்கள் குறித்து, நாட்டு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமென, கட்சித் தொண்டர்களிடம், பாஜக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

7 views

திருப்பூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை - போக்குவரத்து பாதிப்பு -மின்சாரம் துண்டிப்பு

திருப்பூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால், சாலையில் மரம் முறிந்து விழுந்தது.

14 views

"தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்" - பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் அனல் காற்று வீசக் கூடும் என்றும், அதிகபட்சமாக 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

57 views

சொகுசு காரில் குட்கா பொருட்கள் கடத்தல்: இருவர் கைது - கார் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே போலீசார் வாகன சோதனையின்போது, காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் மற்றும் சுதாகர் என்பவர்கள் வந்த சொகுசு காரில் பண்டல் பண்டலாக ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் இருந்துள்ளன.

7 views

சூறாவளி காற்றுடன் பலத்த மழை: டிரான்ஸ்பார்மர் - மின்கம்பங்கள் சாய்ந்தன

கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன.

5 views

சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை - மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், காளிபாளையம், ஆலம்பாளையம் பகுதிகளில், பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் முறிந்து விழுந்தன.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.