நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த நிர்மலா தேவி

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த பேராசிரியர் நிர்மலா தேவி, மயக்கமடைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
x
நீதிமன்றத்தில் ஆஜராக வந்த பேராசிரியர் நிர்மலா தேவி, மயக்கமடைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்துள்ள நிர்மலா தேவி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர், ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு  நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, 3 பேரும் வரும் 23-ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார். இதனிடையே ஆஜராக வந்த நிர்மலா தேவி, மயங்கி விழுந்ததால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்