விஜயதசமியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி : நெல்மணியில் 'அ' எழுதிய குழந்தைகள்

விஜயதசமியையொட்டி, தமிழகத்தில் உள்ள பல கோயில்களில் திருஏடு ஆரம்பம் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
x
விஜயதசமியையொட்டி, தமிழகத்தில் உள்ள பல கோயில்களில் திருஏடு ஆரம்பம் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. மகாலிங்கபுரம் மற்றும் அண்ணாநகரில் உள்ள ஐயப்பன் கோயிலில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் திரண்டிருந்தனர். பெற்றோர் தங்கள் குழந்தைகளை மடியில் வைத்திருக்க வித்யாரம்பம் நடந்தது. கோவில்களில் பூசாரிகள், நம்பூதிரிகள், தங்க மோதிரம் மற்றும் நெல்மணியால் குழந்தைகளின் நுனி நாக்கில் 'அ' எழுதினர். இதையடுத்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கையை பிடித்து, தாம்பூல தட்டில் நிரப்பப்பட்டிருக்கும் பச்சரிசி, நெல்மணியில் தாய்மொழியின் முதல் எழுத்தை எழுத கற்றுக் கொடுத்தனர். இந்த நல்ல நாளில் குழந்தைகள் கல்வி தொடங்கினால், அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பது பெற்றோர்களின் நம்பிக்கையாகும். 

Next Story

மேலும் செய்திகள்