திருக்குறள் முதல் கொன்றை வேந்தன் வரை.... நினைவாற்றலில் அசத்தும் 4 வயது சிறுவன்

தமிழ் இலக்கியங்களை தன் சுட்டு விரலில் வைத்துள்ளான் கோவையை சேர்ந்த நான்கு வயது சிறுவன்.
x
தமிழ் இலக்கியங்களை தன் சுட்டு விரலில் வைத்துள்ளான் கோவையை சேர்ந்த நான்கு வயது சிறுவன். கோவை ஒத்தகால்மண்டபத்தை சேர்ந்த கருணாஹரிராம் - கீதா தம்பதியின் நான்கு வயது சிறுவன் ராகுல். நாடுகளின் பெயரை சொன்னால் தலைநகரத்தை சரியாக சுட்டிக்காட்டுவது, நாடாளுமன்ற உறுப்பினகள் பெயர்கள் மற்றும் தேசியக்கொடி என சிறுவனின் நினைவாற்றல் காண்போரை மெய்சிலிர்க்க செய்கிறது. இத்தனை சிறிய வயதில் இத்தனை பெரிய நினைவாற்றல் எப்படி சாத்தியம் என கேட்டால், தமிழே முழு முதற்காரணம் என்கின்றனர் சிறுவனது பெற்றோர். மழலை குறளில் இலக்கியங்களை சிறுவன் கூறும் அழகு, அந்த தமிழுக்கே அழகு சேர்ப்பதாய் தான் உள்ளது. தமிழ் மொழி மீது சிறுவனுக்கு எப்படி இத்தனை பற்று வந்த‌து என்பதை ஆராய்ந்த‌போது, அதில் அவரது தந்தையின் பங்கு அளப்பரியது என்பது புலனான‌து. ஆங்கிலத்தில் பேசுவதே அறிவு என கருதி கொண்டிருக்கும், இந்த நவீன தமிழ் சமூகத்தில், தாய் மொழி போற்றும் கருணா - கீதா தம்பதி, விதி விலக்காய் உயர்ந்து ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

Next Story

மேலும் செய்திகள்