தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடல் பகுதியில் நிலவும் காற்றின் மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், சென்னையை பொறுத்தவரை, நகரின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்