நுங்கம்பாக்கத்தில் வங்கி அதிகாரி வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை : சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை
பதிவு : அக்டோபர் 07, 2019, 12:44 PM
சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் வங்கி அதிகாரி வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நுங்கம்பாக்கம்,  காம்தார் நகர்,  அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விஸ்வநாதன். விடுமுறை நாட்களையொட்டி தனது குடும்பத்துடன் விஸ்வநாதன் , வட நெம்மேலியில் உள்ள பண்ணை வீட்டிற்கு  சென்றுள்ளார். வழக்கம்போல் வேலைக்காரப் பெண் வேலை முடிந்தவுடன் வீட்டு சாவியை கீழ்தளத்தில் உள்ள பெட்டியில் வைத்துள்ளார். இந்நிலையில் விஸ்வநாதன் வீடு திரும்பி வந்து பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 பவுன்  நகை மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து தகவலறிந்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார் , அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

பிற செய்திகள்

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

21 views

+2 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது.

6 views

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு விவகாரம் - முறைகேட்டில் ஈடுபட்ட 199 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 199 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

67 views

சென்னையில் இருந்து மொரிஷியஸுக்கு சிறப்பு விமானம்

சென்னையில் இருந்து மொரிசியஸ் நாட்டிற்கு சென்ற சிறப்பு விமானத்தில் 110 பேர் பயணம் மேற்கொண்டனர்.

218 views

675 புதிய மருத்துவர்களை நியமனம் செய்ய உத்தரவு - 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க சுகாதாரத்துறை உத்தரவு

675 புதிய மருத்துவர்களை, 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

25 views

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த வழக்கு: "தமிழகம் கையாளும் நிலை வெட்கமாக உள்ளது" - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை வெட்கமாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

356 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.