சீன அதிபர் தங்கவுள்ள ஓட்டலில் முறையான ஆவணங்கள் இல்லாமல் நுழைந்த நைஜீரிய இளைஞர் தப்பியோட்டம்

மாமல்லபுரத்தில் சீன அதிபர் தங்கும் ஓட்டலில், முறையான ஆவணமின்றி நுழைந்த நைஜீரியா இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
மாமல்லபுரத்தில் சீன அதிபர் தங்கும் ஓட்டலில், முறையான ஆவணமின்றி நுழைந்த நைஜீரியா இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரம் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது. தங்கும் விடுதிகளில், காவல்துறையினர் நடத்திய தீவிர சோதனையில், நைஜீரியா இளைஞர் ஒருவர் முறையான ஆவணமின்றி தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அறைக்கு சென்று பார்ப்பதற்குள், நைஜீரியா இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். அவரின் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறை, நைஜீரியா இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்