தேசிகர் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவத்தை ஒட்டி, தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
தேசிகர் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்
x
கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவத்தை ஒட்டி, தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. தேவநாத சுவாமி கோயிலில் கடந்த 29ஆம் தேதி முதல் தேசிகர் பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெறுதையொட்டி, அதிகாலையில் பெருமாள் மற்றும் தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர், தேசிகர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தேரில், முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தார்.  இந்நிகழ்ச்சியில் ஏராளாமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை அவுசதகிரி மலையில் உள்ள ஹயக்ரீவர் சன்னதியில், தேசிகர் ரத்னாங்கி சேவை நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்