பிரதமர் மோடி- சீன அதிபர் வருகை : புதுப்பொலிவு பெற்ற சாலையோர சுவர்கள்

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வரும் போது, விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி- சீன அதிபர் வருகை : புதுப்பொலிவு பெற்ற சாலையோர சுவர்கள்
x
வரலாற்று புகழ் பெற்ற மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகிற 11ஆம் தேதி சந்தித்து பேச உள்ளனர். இதற்காக இரு நாட்டு தலைவர்கள் சென்னை வரும், போது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் மார்க்கத்தில் செல்லும் சில விமானங்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் சென்னை விமான போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, இரு நாட்டு தலைவர்கள் வருகையையொட்டி, சென்னை விமானநிலையத்தில், சாலையோர சுவர்கள் சுத்தம் செய்யப் பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. கலாச்சாரம், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை செல்லும் வகையில் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநனர், வண்ண ஓவியங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்