சீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டம்: 8 திபெத்தியர்கள் கைது - நோட்டீஸ் பறிமுதல்
பதிவு : அக்டோபர் 07, 2019, 01:18 AM
மாமல்லபுரம் வருகை தரும் சீன அதிபருக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த திபெத் நாட்டினர் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீன அதிபர்  ஜின் பிங் வருகிற 11 ஆம் தேதி தமிழகம் வர உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு 2 நாட்கள் பிரதமர் மோடியை சந்திப்பதுடன், பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களிலும் கையெழுத்திய உள்ளார்.  இந்த நிலையில், தமிழகம் வரும் சீன அதிபருக்கு எதிராக திபெத் நாட்டினர் ஆர்ப்பாட்டம் நடத்த கூடும் என்பதால் சென்னையில் தங்கியுள்ள திபெத் நாட்டினர் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர். சென்னை, கிழக்கு தாம்பரம் பகுதியில் தங்கியுள்ள திபெத் மாணவ, மாணவிகளின் அறைகளை சோதனையிடச் சென்றபோது அங்கு 2 மாணவர்கள் தங்கியுள்ள அறையில் சீன அதிபருக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட நோட்டீஸ்களை போலீசார் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து ஒரு பெண், 2 மாணவர்கள் உட்பட 8 திபெத்தியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, அவர்களை கைது செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை - அமெரிக்க அதிபரை கட்டி அணைத்து வரவேற்ற மோடி

அகமாதாபாத் வந்து இறங்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்பை பிரதமர் மோடி கட்டி அணைத்து வரவேற்றார்.

106 views

"ஸ்ரீஹரிகோட்டாவில் 10,000 இருக்கை கொண்ட அரங்கு" - வானொலி உரையில் பிரதமர் மோடி பெருமிதம்

அறிவியல், தொழில் நுட்பத்தில் இளைஞர்கள்அதிக ஆர்வம் காட்டி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

27 views

திருப்பதியில் பிரதமரின் சகோதரர் - ஏழுமலையானை தரிசித்தார் பிரகலாத்

பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.

13 views

பிற செய்திகள்

தமிழ் சினிமாவின் வியாபாரம் மந்தமாக உள்ளது : தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் கவலை

2020 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் வியாபாரம் மந்தமாக உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

15 views

கைதி ரீமேக்கில் நடிக்கிறார் அஜய் தேவகன்

கைதி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் நடிக்க உள்ளார்.

33 views

"விமல் படங்களை வெளியிட என் அனுமதி தேவை" - அரசு பிலிம்ஸ் கோபி தயாரிப்பாளர்களுக்கு கடிதம்

கடனை முழுமையாக திருப்பித் தராதவரை நடிகர் விமல் படங்களை தமது அனுமதியின்றி வெளியிட முடியாது என்று தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு அரசு பிலிம்ஸ் கோபி கடிதம் அனுப்பியுள்ளார்.

15 views

வருங்கால வைப்பு நிதி வட்டி குறைக்கப்படுமா?

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

22 views

கிராமப் புறங்களுக்கு சேவை அளிக்கும் அஞ்சலக வங்கி : 2 ஆண்டுகளில் 2 கோடி வாடிக்கையாளர்களை எட்டியது

போஸ்ட் பேமன்ட் பேங்க் என்கிற இந்திய அஞ்சலக வங்கி 2 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கடந்துள்ளது.

5 views

டெல்லி - கான்பூர் சென்ற ரயிலில் வெடிகுண்டு? - வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் தீவிர சோதனை

டெல்லியிலிருந்து கான்பூர் நோக்கி சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரசில், வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.