ரூ. 2.50 லட்சத்தில் கிணற்றை தூர்வாரிய இளைஞர்கள் - விவசாயிகள், பொதுமக்கள் பாராட்டு

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே இளைஞர்கள் அறக்கட்டளை சார்பில் இரண்டரை லட்ச ரூபாய் செலவு செய்து கிணற்றை தூர்வாரி சீரமைத்து ஊராட்சியிடம் ஒப்படைத்தனர்.
ரூ. 2.50 லட்சத்தில் கிணற்றை தூர்வாரிய இளைஞர்கள் - விவசாயிகள், பொதுமக்கள் பாராட்டு
x
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தச்சூர் கிராமத்தில் 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மனம் என்ற பெயரில் கல்வி அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். அந்த கிராம ஊராட்சிக்கு சொந்தமான பொதுக்கிணறு ஒன்று பாழடைந்து முட்புதர்கள சூழ்ந்து காணப்பட்டது. அந்த கிணற்றை அறக்கட்டளை சார்பில் இரண்டரை லட்ச ரூபாய் செலவு செய்து தூர்வாரி சீரமைத்து ஊராட்சியிடம் இளைஞர்கள் ஒப்படைத்தனர். இளைஞர்களின் இந்த மகத்தான பணிக்கு விவசாயிகளும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்