திருச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் கொள்ளை
திருச்சியில், பாம்பு பயத்தால் பக்கத்து வீட்டில் தூங்கிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 65 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த காட்டுப்பட்டியை சேர்ந்தவர் மரிய செல்வம். அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரான இவரது வீட்டிற்கு வெளியே பாம்பு செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சப்தம் போட்டுள்ளார். உடனே, அக்கம்பக்கத்தினர் பாம்பை அடித்துள்ளனர். எனினும் பாம்பு பயத்தில் இருந்த மரிய செல்வம், வீட்டை பூட்டி விட்டு பக்கத்து வீட்டில் தூங்க சென்று விட்டார். இந்நிலையில், மறுநாள் காலை பார்த்தபோது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது,இருந்த 65 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதையடுத்து மரியசெல்வம் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story