மன்னார்குடி அருகே குட்டையில் பாய்ந்த அரசு பேருந்து - ஓட்டுநர், நடத்துனர் உட்பட 3 பேர் காயம்
மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து ஒன்று மன்னார்குடி அருகே சாலையோர குட்டைக்குள் பாய்ந்தது.
மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து ஒன்று, மன்னார்குடி அருகே சாலையோர குட்டைக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் பேருந்து பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும், பேருந்தின் முன்பகுதியில் அமர்ந்திருந்த நடத்துநர், ஓட்டுநர் மற்றும் பயணி ஒருவர் என 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள், மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து பட்டீஸ்வரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story