தனியாக இருந்த மூதாட்டி கொலை - சேலையில் தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்

கரூர் அருகே மூதாட்டியை கொலை செய்து, பல லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியாக இருந்த மூதாட்டி கொலை - சேலையில் தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்
x
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த லிங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த மணி என்பவரின் மனைவி எல்லம்மாள். அவருக்கு வயது 60. மணி இறந்துவிட்ட நிலையில், எல்லம்மாள் விவசாயம் செய்து வந்தார். மேலும், அப்பகுதியில் வட்டிக்கு கடன் கொடுப்பதும், தங்க நகைகளை அடகு வாங்கும் தொழிலிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவர், தூக்கு மாட்டிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.

புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு எல்லம்மாள் கொலை செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தது தெரிந்தது. தடயங்கள் தெரியாதவாறு மிளகாய் பொடியையும் மர்ம நபர்கள் வீசிவிட்டுச் சென்றதும் தெரிந்தது. விசாரணையில், நகைகள் மற்றும் பீரோவில் வைத்திருந்த பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரிந்தது. எல்லம்மாள் தனியாக வசிப்பதை அறிந்த, தெரிந்த நபர்கள் தான் இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்