ஹெல்மெட் அணிந்து வந்தவர்களிடம் லஞ்சம் வாங்கிய போலீசார் - வீடியோ காட்சி வெளியீடு

கோவையில் ஹெல்மெட் அணிந்து வந்தவரிடம் வலுக்கட்டாயமாக நூறு ரூபாய் லஞ்சம் வசூலித்த போலீசாரின் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களிடம் லஞ்சம் வாங்கிய போலீசார் - வீடியோ காட்சி வெளியீடு
x
கோவையில் ஹெல்மெட் அணிந்து வந்தவரிடம் வலுக்கட்டாயமாக நூறு ரூபாய் லஞ்சம் வசூலித்த போலீசாரின் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கேரளாவில் இருந்து ஈஷா யோகா மையத்திற்கு இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு இளைஞரிடம் சிறப்பு உதவி ஆய்வாளர் மாறன் என்பவர் தலா 100 வீதம் 600 ரூபாய் லஞ்சம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சியை அந்த இளைஞர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இதற்கிடையே, இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்தவர்கள் ஹெல்மெட் அணியாததால் தான் அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்