மாமல்லபுரம் : விடுதிகளில் இருந்து இலங்கை, திபெத்தியர் வெளியேற்றம்

பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையால், மாமல்லபுரத்தில் இருந்து இலங்கை மற்றும் திபெத்தியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
மாமல்லபுரம் : விடுதிகளில் இருந்து இலங்கை, திபெத்தியர் வெளியேற்றம்
x
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரின் வருகையை தொடர்ந்து, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளம், இருவரும் சுற்றி பார்க்க உள்ள கற்கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகள் அனைத்தும் சிசிடிவி மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, மாமல்லபுரத்துக்க வரும் சுற்றுலா பயணிகள், வெளியேறுவோர், விடுதிகளில் நீண்ட நாட்களாக தங்கி உள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடைபெறுகிறது. 24 மணி நேர கண்காணிப்பு வளையத்துக்குள் உள்ள மாமல்லபுரம் விடுதிகளில், இலங்கை தமிழர்கள் மற்றும் திபெத்தியர்கள் இருந்தால் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதுபோல, கிழக்கு கடற்கரை சாலை முழுதும் போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்