இளம்பெண் யாருக்கு? - நண்பர்களுக்குள் மோதல்

இளம்பெண்ணை காதலிப்பதில் நண்பர்களுக்குள் எழுந்த மோதலில், கல்லூரி மாணவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், 3 இளைஞர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
x
கரூர் மாவட்டம் ஆரணி அருகே கருப்ப கவுண்டரை சேர்ந்த கார்த்திக் என்ற கல்லூரி மாணவர், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட, அந்த இளம்பெண், கார்த்திக்கின் நண்பர் தர்மராஜை காதலித்துள்ளார். இதனால், கார்த்திக் மற்றும் தர்மராஜ் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கார்த்திக்கை தீர்த்துக்கட்ட  திட்டம் தீட்டிய தர்மராஜை, தன் அண்ண‌ன் ராம‌ராஜ், நண்பர் அருண்குமாருடன் சேர்ந்து கார்த்திக்கை அடித்து கொன்றுள்ளனர். பின்னர் , தற்கொலை போல காட்டிக்கொள்ள சடலத்தை  தண்டவாளத்தில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.  கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம், கரூர் மகிளா நீதிமன்றத்தில் , நீதிபதி ச‌சிகலா முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. விசாரணை முடிவில், மூவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்