போலி பாஸ்போர்ட் தயாரித்த திமுக பிரமுகர் கைது

திருப்பூரில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் தொழில் செய்து வந்த திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலி பாஸ்போர்ட் தயாரித்த திமுக பிரமுகர் கைது
x
போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த பிரேம்குமார் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார். அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பூர் ஓடக்காடு பகுதியை சேர்ந்த ராஜ்மோகன்குமார், பிரேம்குமாரிடம் ரூ.28 லட்சம் பெற்றுக்கொண்டு போலி பாஸ்போர்ட் பெற உதவி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ராஜ்மோகன்குமாரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திமுக பிரமுகர் என்பதும், திருப்பூரில் அலுவலகம் அமைத்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு பாஸ்போர்ட் எடுத்து அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும்,  அவருக்கு உடந்தையாக இருந்த பெண் உதவியாளரான பாரதி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், ராஜ்மோகன்குமாரின் வீடு மற்றும் அலுவலகத்தில் கியூ பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் முக்கிய பிரமுகர்கள் உள்பட மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்