ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை உத்தரவு : நீதிமன்றத்துக்கு எடுத்து செல்லப்படும் இயந்திரங்கள்

ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
x
ராதாபுரம் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை வெற்றியை எதிர்த்து, தி.மு.க வேட்பாளர் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வாக்குப்பதிவு இயந்திரங்கள், தபால் வாக்குகளை நாளைக்குள் தலைமை பதிவாளரிடம் சமர்ப்பிக்க ஆணையிட்டது. இதையடுத்து, ராதாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தபால் வாக்குகள் மற்றும் ராமயன்பட்டில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  24 பேர் கொண்ட தேர்தல் அதிகாரிகள் குழுவும் சென்னை வருகிறார்கள். நாளை, தேர்தல் ஆணையம் மூலம் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் வாக்கு இயந்திரங்கள் மற்றும் தபால் வாக்குகள் அனைத்தும் ஒப்படைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அ.தி.மு.க எம்.எல்.ஏ இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்