திங்கள் முதல் வெள்ளி வரை திருடும் கும்பல்

வாரச் சம்பளத்துக்கு செல்போன் திருடி வந்த ஆந்திராவை சேர்ந்த 11பேர் கொண்ட கும்பலை சென்னை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
x
சென்னை பூக்கடை பகுதியில் சுற்றித் திரிந்தவர்களை மடக்கிய யானைக்கவுனி போலீசார், அவர்களிடம் செல்போன்கள் ஏதும் இல்லாததால் விடுவித்து கண்காணித்து வந்தனர். இதில், ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அடுத்த ஆட்டோ நகர் கிராமத்தைச் சேர்ந்த 10 இளைஞர்களை ரவி என்பவன் அழைத்து வந்ததும், அவர்கள் மூலம், மக்கள் கூடும் இடங்களில் ஆயிரக்கணக்கான செல்போன்களை திருடி வந்ததும் தெரியவந்தது. செங்குன்றம் அடுத்த சோழவரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த ஆந்திர திருட்டு கும்பலை பிடித்த போலீசாரின் விசாரணையில் இது தெரிய வந்தது. வாரச் சம்பளமாக ஆறாயிரம் ரூபாய் வழங்கப்பட்டதும், செல்போன் உதிரி பாகங்களை மாற்ற ஆந்திராவில் ஆள் வைத்திருப்பதும் போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்