நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் இர்பானை தேடி மொரிசியஸ் விரைந்த தனிப்படை போலீசார்

இர்பானை தேடி மொரிசியஸ் தீவுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் இர்பானை தேடி மொரிசியஸ் விரைந்த தனிப்படை போலீசார்
x
நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில், மாணவர் இர்பானின் தந்தை முகமது ஷபியை  கைது  செய்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தபோது, இர்ஃபானின் மருத்துவ சேர்க்கைக்கு 20 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக கொடுத்ததை ஒப்புக் கொண்டார். மேலும், உதித் சூர்யா உள்ளிட்ட அனைவரும் ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, வாணியம்பாடியை சேர்ந்த புரோக்கர்  வேதாச்சலம்தான் தனக்கு புரோக்கர் ரஷித்தை அறிமுகம் செய்ததாக சிபிசிஐடி போலீசாரிடம் முகமது ஷபி தெரிவித்துள்ளார்.இதன் தொடர்ச்சியாக அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், தப்பியோடிய மாணவர் இர்பானை பிடிப்பதற்காக, மொரிசியசுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்