உல்லாச வீடியோ விவகாரம் : நாஞ்சில் சம்பத் மறுப்பு

சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில் இருப்பது தான் அல்ல என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
உல்லாச வீடியோ விவகாரம் : நாஞ்சில் சம்பத் மறுப்பு
x
விடுதி அறை ஒன்றில் இளம்பெண் ஒருவருடன், நாஞ்சில் சம்பத் போன்ற ஒருவர் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், சிலர் தன்னை அழுக்காக்கி அசிங்கப்படுத்த கருதுவதாகவும் ஆனால் அது கைகூடாது என்று தெரிவித்துள்ளார். சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதை போல சோதனைகள் வந்தாலும் சுயமரியாதைக்கு பங்கம் வராமல் எப்போதும் நடப்பேன் என்று கூறி உள்ள அவர், மானமும் மரியாதையும் தமது மரபணுவோடு கலந்தது என்பது புரிந்தவர்களுக்கு புரியும் என்று தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்