தமிழகம் வந்தது கிருஷ்ணா நதி நீர் : அமைச்சர்கள் மலர்தூவி வரவேற்பு

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது.
x
சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கடந்த 25-ஆம் தேதி 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர்  152 கிலோ மீட்டர் கடந்து, இன்று காலை தமிழக - ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டை வந்தடைந்தது. தமிழக எல்லைக்கு வந்தடைந்த கிருஷ்ணா நதி நீரை தமிழக அமைச்சர்கள் பெஞ்சமின், மா.பாஃ.பாண்டியராஜன். மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரிரவிகுமார், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூக்கள் தூவி வரவேற்றனர்.  தற்போதைய நிலவரப்படி பூண்டி நீர்த்தேக்கத்தின் முழுக் கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில், 491 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. கிருஷ்ணாநதி நீர் மூலமாக இம்முறை பூண்டி நீர்தேக்கத்திற்கு 4 டி.எம்.சி  நீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்