"இயற்கையை ரசிக்க தொடங்கினால் அழிக்க மனம் வராது" - தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவ கல்லூரியில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
x
சென்னை ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவ கல்லூரியில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.  தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 13 அடுக்குகள் கொண்ட அந்த கட்டடத்தை திறந்து வைத்தார். சின்ன சின்ன விஷயங்களை கடைபிடித்தால் பெரிய விஷயங்கள் தானாக நடக்கும் என்று தெரிவித்த தமிழிசை, செல்போனால் இயற்கையை ரசிக்க முடியாத நிலைக்கு நமது சமூகம் தற்போது தள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். முதலில் இயற்கையை நாம் ரசிக்க கற்று கொள்ள வேண்டும் என்றும், இயற்கையை ரசிக்க தொடங்கி விட்டால் அதனை அழிக்க மனம் வராது மாறாக பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தான் வரும் என்றும் தமிழிசை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்