தமிழக அரசு சார்பில் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயகுமார், பெஞ்சமின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் சி.பா.ஆதித்தனார்  சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை
x
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் இந்த ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்படும் என கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தமிழ் அறிஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அதன்படி, தமிழக அரசு சார்பில் சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார்  சிலைக்கு அமைச்சர்கள் ஜெயகுமார், பெஞ்சமின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்