தஞ்சை - திருச்சி இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம்

தஞ்சை - திருச்சி இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்சார ரயில் இயக்கி சோதித்து பார்க்கப்பட்டுள்ளது.
தஞ்சை - திருச்சி இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம்
x
தஞ்சை-திருச்சி இடையே இரட்டை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு , மின்மயமாக்கும் பணியும் நடைபெற்று ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பாதையில் 15-க்கும் மேற்பட்ட அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மணிக்கு 95 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், வேகத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.  இந்நிலையில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில்  சோதனை ஓட்டம் நடைபெற்றது. தஞ்சையில் இருந்து  திருச்சி வரை 2 பெட்டிகளுடன் கூடிய சிறப்ப சோதனை மின்சார ரயில் இயக்கப்பட்டது. தெற்கு ரயில்வே முதன்மை தலைமைப் பொறியாளர் கே.ரவிக்குமார் தலைமையில்,  பொறியாளர்கள் ரயில்வே அதிகாரிகள் இதில் ஈடுபட்டனர்.  வேகம் அதிகரிக்கப்பட் உடன் தஞ்சையில் இருந்து திருச்சிக்கு 27 நிமி​டத்தில் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்