குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்ற தாய் நடத்திய பாச போராட்டம் : 380 கிராம் எடை "ஜில்லு" பிழைத்த கதை

உலகினில் சிறந்தது தாய்மை என்பார்கள். பத்து ஆண்டுகளுக்கு பிள்ளை பேறு இன்றி தவித்த நிலையில், ஐந்தரை மாதத்தில், குறை பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தையில் ஒன்றை பறிகொடுத்து, மற்றொரு குழந்தையை காப்பாற்ற தாய் ஒருவர் நடத்திய பாசப் போராட்டம் குறித்து கூறுகிறது இந்த செய்தி தொகுப்பு.
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்ற தாய் நடத்திய பாச போராட்டம் : 380 கிராம் எடை ஜில்லு பிழைத்த கதை
x
உலகினில் சிறந்தது தாய்மை என்பார்கள். பத்து ஆண்டுகளுக்கு பிள்ளை பேறு இன்றி தவித்த நிலையில், ஐந்தரை மாதத்தில், குறை பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தையில் ஒன்றை பறிகொடுத்து, மற்றொரு குழந்தையை காப்பாற்ற தாய் ஒருவர் நடத்திய பாசப் போராட்டம் குறித்து கூறுகிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னையைச் சேர்ந்த காதல் தம்பதியினர் கீதா மற்றும் அறிவழகன். திருமணமாகி பத்து வருடங்களுக்குப் பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு கீதா கருவுற்றிருந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் கர்ப்பப்பை சவ்வு கிழிதல் ஏற்பட்டதன் காரணமாக  22 வார காலத்தில் குறை பிரசவத்தில் கீதாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. பலவீனம் காரணமாக ஒரு குழந்தை இறந்து விட மற்றொரு குழந்தையை காப்பாற்ற ஒருபுறம் தாயும், மறுபுறம் மருத்துவர்களும் நடத்திய போராட்டம் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.

தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில்,100 நாட்கள் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, ஊட்டச்சத்து அளிப்பது முதல் வளர்ச்சி ஊக்கிகள் வரை பல சவால்களை எதிர்கொண்டு, குழந்தையின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றி உள்ளனர். குழந்தையை காப்பாற்றுவதற்கு கூடுதல் செலவு ஏற்பட்ட நிலையில், முகநூல் மூலம் முகம் தெரியாத பலரும் தன்னார்வத்துடன் பணஉதவி செய்ததாக கூறும் தாய் கீதா, குறை பிரசவத்தில் குழந்தை பிறந்ததால், தனக்கு தாய்ப்பால் சுரக்காத நிலையில், பேஸ்புக் மூலம் பல தாய்மார்கள் தாய்ப்பால் கொடுத்து குழந்தையை காப்பாற்ற உதவியதாக கீதா நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். குழந்தைப்பேறு இல்லாமலும் வயிற்று வலியாலும் தவித்து வந்த தாம் அனைத்து சோதனைகளையும் கடந்து வர உற்ற துணையாக தன் கணவர் இருந்ததாகவும், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்த தன்னை ஆறுதல்படுத்தி, அன்பும் ஆதரவும் அளித்த கணவரால் தான் இன்று இந்த குழந்தையை காப்பாற்றிட முடிந்துள்ளதாக கூறுகிறார் கீதா..

380 கிராம் எடையுடன் ஐந்தரை மாதத்தில் பிறந்து, தாயின் பாசப் போராட்டத்துடன், பல கட்ட மருத்துவ போராட்டத்தை கடந்து, முகம் தெரியாத பல முகநூல் பயனர்களின் உதவியுடன், உயிர் பிழைத்து, மூன்றரை கிலோ எடையுடன், ஆரோக்கியமாக இந்தியாவின் இளைய குழந்தைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. ஜில்லு என பெயரிடப்பட்டிருக்கும் இந்த குழந்தையின் வசீகர சிரிப்பை பார்க்கும்போது, பல அன்புக்கரங்களின் ஈர நெஞ்சமும், தாயின் பாசப் போராட்டமும் தான் என்றும் நினைவுக்கு வரும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

Next Story

மேலும் செய்திகள்