"கணவர் அடித்து துன்புறுத்தியால் தலைமறைவானேன்" - மாயமான டிக் டாக் - புதுமணப்பெண் பேட்டி

டிக்- டாக் செயலியால் கூடா நட்பு ஏற்பட்டு, 45 பவுன் நகையுடன் மாயமானதாக கூறப்பட்ட இளம்பெண், சிவகங்கை போலீசில் தஞ்சம் அடைந்தார்.
x
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே  கடம்பாகுடியைச் சேர்ந்த வினிதா என்ற பெண்ணுக்கு கடந்த ஜனவரி 17 ல் திருமணம் நடந்தது. இதை தொடர்ந்து அவரது கணவர் ஆரோக்கிய லியோ, சிங்கப்பூர் சென்றார். தனிமையில் இருந்த வினிதா டிக்-டாக் செயலியில் மூழ்கியதாக தெரிகிறது. டிக்டாக் மூலம் வினிதாவிற்கு திருவாரூரை சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட, இருவரும் நேரில் சந்தித்து கொள்ளும் அளவிற்கு பழகியுள்ளனர்.  ஒரு கட்டத்தில் அபி மீது கொண்ட ஈர்ப்பால், வினிதா தமது கைகளில் அபியின் உருவத்தை பச்சை குத்தியுள்ளார். இதை கண்டுபிடித்த ஆரோக்கிய லியா, திடீரென சொந்த ஊர் திரும்பிவந்து, வினிதாவை கண்டித்த‌தாக தெரிகிறது. இந்த நிலையில், வினிதா கடந்த 18 ஆம் தேதி தலைமறைவானார். அவர், தமது சகோதரி நகை உள்பட 45 பவுன் நகைகளுடன் மாயமானதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சிவகங்கை காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த வினிதா, நகையை எடுத்து செல்லவில்லை, கணவர் அடித்து துன்புறுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறியதாக, விளக்கம் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்